Posted on February 4, 2011 by kankeyanodai
நேற்று ஏற்பட்ட அசாதாரண கால நிலை மாற்றத்தால் மட்டக்களப்பு மாவட்டக் குளங்கள் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நீர் காங்கேயனோடையின் அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்து வீடுகளுக்குக்குள் தேங்கி வருகிறது. இந் நிலையில் மஸ்ஜிது பத்ர் பள்ளிவாயல் பகுதி மக்கள் பள்ளிவாயலில் தஞ்சடைந்துள்ள நிலையில் இவர்களுக்கான பகல் உணவினை பள்ளிவாயல் நிருவாகமும், பிரதேச செயலகமும் இணைந்து செய்து வருகின்றனர். மேலதிக தகவல்கள் விரைவில் பதிவேறக் காத்திருக்கிறது…….
This slideshow requires JavaScript.
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on January 22, 2011 by kankeyanodai
காங்கேயனோடை ஜாமிஉல் மஸ்ஜித் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பாலமுனை A.S.M.பைறூஸ் (பலாஹி) அவர்கள் 14.01.2011ல் நிகழ்த்திய ஜும்ஆ பயான்னை செவிமடுக்க இங்கே அழுத்தவும்.
[Audio http://blip.tv/9910007653773/Kankeyanodai-JUMMAHBAYAN02210.mp3?brs=43&bri=1.4]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on January 22, 2011 by kankeyanodai
காங்கேயனோடை பொது வைதிய சாலை இப்பகுதி மக்களால் அண்மையில் சிரமானத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டது. இந் நிகழ்வில் விசேடமாக இப்பகுதிப் பெண்கள் பங்கு கொண்டு இச் சிரமாதானத்தில் பங்கு கொண்டு தங்களின் பங்களிப்பினை வழங்கியது குறிப்பிடத்தக்க விடமாகும். வெள்ளப் பெருக்கின் காரணமாக இவ்வைத்தியசாலையின் பெரும்பாலான மருந்துப் பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன் குளிர்சாதப் பெட்டி மற்றும் வைத்திய உபகரணங்கள் என ஏகப்பட்ட பொருட்கள் வெள்த்தால் பழுதடைந்துமுள்ளன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வசதி படைத்த தனவந்தர்ளும் முன்வந்து நிவர்த்தி செய்ய ஆவண செய்ய வேண்டுமென எமது இணையம் பொது மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றது.
This slideshow requires JavaScript.
Filed under: Uncategorized | 1 Comment »
Posted on January 22, 2011 by kankeyanodai
அண்மையில் எமது பகுயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் காங்யேனோடையின் பிரதான வீதி முற்றாப் பாதிக்கப்ட்டுள்ளதை கீழ் குறிப்பிடும் படங்கள் காட்சிப்படுத்துகின்றன. இதனை அவசமாக திருத்தப்படாத விடத்து இவ்வீதியால் பயணிப்பது முடியாத காரியமாக மாறிவிடும. எனவே இது குறித்து பொறுப்புடைய அதிகாரிகளும் ஊர் அரசியல் தலைமைகளும் கூடிய கவனம் செலுத்தி இவ்வீதியை அவசரமாக புணரமைப்பு செய்ய வேண்டுமென இவ் இணைய பதிவேட்டுச் செய்தி மூலம் கேட்டுக் கொள்கின்றோம்.
This slideshow requires JavaScript.
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on January 22, 2011 by kankeyanodai
மண்முனைப் பற்று பிரதேச மக்களின் துண்டுப்பிரசுரம்வெள்ள நிவாரணம் வழங்கப்படபவில்லை எனஅண்மையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குள் புகுந்து காரியாலய ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த செயலைக் கண்டித்து இப்பகுயில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் வாசகர்களின் கவனத்திற்கு காட்சிப்படுத்தப்படுகிறது.
இதனை பதிவிறக்கம் செய்ய இவ் முகவரிக்குச் செல்லவும்.
http://dl.dropbox.com/u/17054651/notice/notice.rar
Filed under: Uncategorized | 1 Comment »
Posted on January 14, 2011 by kankeyanodai
காங்கேயனோடை செய்தியாளர் அபூ அவ்பர்
This slideshow requires JavaScript.
நேற்று கால நிலை வழமைக்குத் திரும்பி வெயில் எறித்த போதிலும் இன்று கால நிலை திடிரென மாற்றமடைந்து வானம் கறுத்து அவ்வப்ப்போது தூறல்களாக மழை பெய்து வந்தாலும் ஓடை மண்ணில் ஓடாது தேங்கி நின்ற வெள்ளம் இன்று வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இன்ஷாஅல்லாஹ் நாளை மக்கள் தங்களின் வீடுகளுக்குச் சென்று சுத்தப்படுத்த ஆயத்தமான நிலையில் உள்ளனர். இதுவரை இம்மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமைத்த உணவுகள் நாளை பகலுடன் முடிவடையப் போகின்றது என்ற செய்திகள் ஊர்ஜிதமாகி வருகிறது. இருந்தாலும் முழுமையாகப் பாதிக்கப்பட்ட இவ்வூர் மக்கள் அன்றாடம் சிறு தொழில்களை செய்து வாழ்பவர்கள் என்ற வகையில் இவர்களுக்கான நிவாரண ஒழுங்குகளை அரச தரப்பாலும் ஏனைய அரச சார்பற்ற நிறுவானங்களாலும் முன்னெடுக்கப்பட வேண்டுமென இம்மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இம் மக்களுக்கு நேரடியாக உதவ முன்வருபவர்கள் கீழ்கானும் மதொலைபேசி எண்களோடு தொடர்பு கொண்டு தங்களின் உதவிகளை வழங்குமாறு காங்கேயனோடை இணையம் கேட்டுக் கொள்கிறது. எம்.ஐ.எம் .அப்பாஸ் (நளீமி) 0718063934மௌலவி ஏ.சீ.எம்.றிபாய் ஜே.பி 0775151664
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on January 13, 2011 by kankeyanodai
இன்று பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் தங்கி இருந்த எமது மக்களுக்கா காத்தான்குடி MFCD நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைத்திய முகாமில் எமது மக்களின் நோய்களை கருணை உணர்வு கொண்ட வைத்தியக் குழுவினால் பரிசோதிக்கப்பட்டு மிகவுமே பெறுமதியான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது இவ்வைத்திய முகாமினை ஏற்பாடு செய்த MFCD நிறுவனத்திற்கும் இங்கு கடமையாற்றிய வைத்தியக் குழுவிற்கும் எமது இணையம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on January 13, 2011 by kankeyanodai
நேற்று ஏற்பட்ட வெள்ள அபாயம் காரணமாக அவசரமாக பாலமுனைப் பிரதேசத்திற்கு குடிபெயர்த எமது காங்கேயனோடை மக்கள் மீண்டும் ஊருக்கு திரும் பி வந்த வண்ணமுள்ளனர். இருந்தாலும் இம் மக்கள் தங்களின் சொந்த வீடுகளிகல் தங்க முடியாது வெள்ளம் தேங்கி நின்றாலும் சொந்த மண்ணின் மீது கொண்ட பற்று இவர்களை ஓடை மண்ணுக்கே கூட்டி வந்து விட்டது. இம்மக்கள் சார்பாகவும் காங்கேயனோடை இணையம் சார்பாகவும் பாலமுனை பிரதேச மக்களுக்கும் ஊர் தலைமைகளுக்கும் குறிப்பாக இங்குள்ள பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம சேவையாளர் ஜனாப் ஹாஜாதீன் அவர்களுக்கும் எமது மணமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on January 13, 2011 by kankeyanodai
This slideshow requires JavaScript.
நேற்றுப் பெய்த அடை இன்று முழுமையா நின்று சூரிய வெளிச்சம் இயல்பு நிலைக்கு திரும்பியதால் பெருக்கெடுத்த வெள்ள நீர் குறைவடைந்த வண்ணமுள்ளது. இந்த நிலை தொடருமாக இருந்தால் இன்னும் ஒர் சில தினங்களில் முழுமையாக வெள்ளம் வடிந்தோடும் என எதிர்பார்கப்படுகிறது. இருந்தாலும் இம்மக்களுக்கான அரசின் உதவிகள் எதுவும் வந்தடையவில்லை என இங்குள்ள மக்கள் ஆதங்கப்பட்டுக் கொள்கின்றனர்.
Filed under: Uncategorized | 1 Comment »
Posted on January 12, 2011 by kankeyanodai
இன்று காலை ஆரம்பித்த அடைமழைகாரணமாகவும் ஏற்கனவே பெருக்கெடுத்து வந்து ஆற்று வெள்ளம் காரணமாகவும் இன்று மாலை சுமார் 5.30மணியலவில் காங்கேயனோடை பெரியபள்ளிவாயல் முஹல்லாவைச் சேர்ந்த மக்கள் பாலமுனை கிராத்தின் பாடசாலைகளில் தஞ்சடைந்துள்ளனர். இவர்களை அவசரமாக அழைத்துச் செல்வதற்காக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அஸ்பர் அவர்களும் மாகாணசபை உறுப்பினர் பரீட் அவர்களும் காத்தான்குடி MFCD நிறுவன பிரதிநிதிகளும் மற்றும் இராணுவ கவச வாகனமும் அல்மனார் அறிவியல் கல்லூரி வாகனமும் தங்களால் முடிந்தளவு வாகன வசிதியை ஏற்பாடு செய்து கொண்டு இம்மக்களை ஏற்றிச் செல்வதற்காக மிகவும் பாடுபட்டதை காணமுடிந்தது.காங்கேயனோடையின் ஏனைய முஹல்லா மக்கள் தற்போது அல்-அக்ஸா வித்தியாலயத்திலும் முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் கட்டடத்திலும் ஓன்று கூடி தங்கியுள்ளனர். இப்பகுதியில் உள்ள மக்கள் காத்தான்குடிக்கு வருவதாக இருந்தால் தோணிமூலம் பயணித்து பெரியபள்ளிவாயல் வரை வந்தால் மாத்திரமே ஏனைய பகுதிகளுக்கு செல்ல முடியுமாகவுள்ளது. இச் செய்தியை பதிவேற்றும் வரை தொடர்ந்து மழை பெய்த வண்ணமேயுள்ளது. ஆற்றங்கரைப் பகுதியில் பலத்த காற்றும் வீசி வருவதாக அறிய முடிகிறது. தற்போது காங்கேயனோடை பெரிய பள்ளிவாயில் அப்பாஸ் நளீமி அவர்களோடு இன்னும் சில சகோதரர்களும் இருந்து கொண்டிருக்க முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயலில் றிபாய் மௌலவி அவர்களின் வழிநடாத்தலில் ஏனைய மக்ளும் மிகவுமே அச்சமான மனநிலையில் இருந்து வருகின்றனர்.
இம்மக்களை காப்பாற்றுதற்றகாக எல்லா வழிகளிலும் உதவி வரும் அனைத்து சகோதரர்களுக்கும் எமது காங்னேயனேடை இணையம் ஊர் மக்கள் சார்பாகவும் காங்கேயனோடை இணையம் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு இங்கு ஏற்பட்டுள்ள அவல நிலை குறித்து இப்பாரிய சோதனையில் இருந்து எம் அனைவரையும் காப்பாற்ற அல்லாஹ்விடம் பிராத்திக்குமாறு வினயமாக இவ்விணையம் கேட்டுக்கொள்கின்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் சே மநல நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும் இணையத் தொடர்பும் மின்சாரமும் சீராக இப்பகுதியில் கிடைக்காததாலும் முறையாக செய்திகளை பதிவேற்றுவதில் பல தடைகளை சந்தித்திருக்கின்றோம் என்ற வேதனைகளுடன் எமது வாசகர்கள் பொறுமை அடைவீர்கள் என நம்புகின்றோம்.
பாலமுனை அஸ்ரப் வித்தியாலயத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும் காட்சிகள்
This slideshow requires JavaScript.
Filed under: Uncategorized | 5 Comments »